அமைச்சர் செந்தில்பாலாஜியின் வேண்டுகோள் டிவிட்... செய்தியை டெலிட் செய்த தந்தி டிவி...

By senthilvel – October 17, 2022

4446

Share E-Tamil Newsநேற்றைய தினம் மாலை 5 மணியளவில் தந்திடிவி வெப்சைட்டில்  "வந்தாச்சு தீபாவளி.. வச்சுட்டோம் இலக்கு  ரூ 600 கோடிக்கு மது விற்க டாஸ்மாக் டார்கெட்" என்கிற தலைப்பில்  செய்தி வெளியானது. இதனை பார்த்த அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் அன்பான தந்திடிவி  எந்த  இலக்கும் நிர்ணயிக்கவில்லை.. தவறான செய்திகளை பதிவிட வேண்டாமே.. நன்றி என குறிப்பிட்டு அந்த செய்தியையும்  சேர்ந்து டிவிட் செய்திருந்தார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் வேண்டுகோள் டிவிட்டரின் எதிரொலியாக சில நிமிடங்களில் தந்தி டிவி தனது செய்தியை வெப்சைட்டில் இருந்து டெலிட் செய்தது...