குட்கா வழக்கில் அதிமுக பெண் பிரமுகருக்கு உதவிய கரூர் போலீஸ் அதிகாரிகள்... பழைய பாசம்- பேரம் என பரபரப்பு தகவல்கள்...

By senthilvel – October 16, 2022

4450

Share E-Tamil Newsலட்சகணக்கான பேரம் மற்றும் பழைய பாசத்தால் அதிமுக பெண் பிரமுகருக்கு ஸ்டேஷன் பெயில் வழங்கிய 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் போலீசார் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.  இது தொடர்பாக போலீசார் மத்தியில் கூறப்படுவதாவது... கரூர் டவுன் செல்வா நகர் முதல் கிராசைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி இந்துராணி (48). அதிமுக பிரமுகர். இவருக்கு சொந்தமான குடோனில் மூட்டை மூட்டையாக தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற ஏட்டு குட்காவை பதுக்கி இருந்தவரான அதிமுக பிரமுகர் இந்துராணியை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். குட்காவுடன் சிக்கிய இந்திராணி அங்கிருந்து மாஜிக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்க அவர் சம்மந்தப்பட்ட ஏட்டுக்கு பேசியிருக்கிறார். மாஜியின் பேச்சை கேட்காமல் ஏட்டு குட்கா இந்திராணியை ஸ்டேஷனுக்கு அழைத்துள்ளார்.  இதனை தெரிந்து கொண்ட மாஜி சம்மந்தப்பட்ட ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டருக்கு போன் போட்ட தோடு அடுத்தகட்டமாக மாவட்டத்தை கவனிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் போன் செய்து நண்பர்கள் வந்து பார்ப்பார்கள் எனவும் கூறியதாக தெரிகிறது..  மாஜியின் போன் காரணமாக சம்மந்தப்பட்ட ஸ்டேஷனில் இருந்து ஏட்விற்கு போன் பறந்தது. இந்திராணி ஸ்டேஷனுக்கு வருவார். நீ உடனடியாக கிளம்பி ஸ்டேஷனுக்கு வா என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது... சுமார் அரைமணி நேரம் கழித்து  கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அதிமுக கொடி கட்டிய காரில் வந்து இறங்கி இருக்கிறார் குட்கா  இந்திராணி.. வந்து இறங்கிய சில நிமிடங்களில்(காக்க வைக்காமல்) இந்திராணியிடம் எழுதி வாங்கிக்கொண்ட  போலீசார் ஸ்டேஷன் ஜாமினில் வந்த காரில் திருப்பி அனுப்பி வைத்தனர்.  குட்கா வழக்கில் ஸ்டேஷன் பெயிலா?  2 அதிகாரிகளின் பழைய பாசத்திற்கு அளவே இல்லையே என கோபமடைந்த டவுன் போலீசார் சிலர் உடனடியாக எஸ்பி சுந்தரவதனத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் எஸ்பி விசாரணை நடத்த நேற்று காலை மீண்டும் இந்திராணி ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாஜியின் போனுக்கு பயந்தும், பெரிய தொகை பேரத்திற்காகவும் குட்கா வழக்கில் அதிமுக பெண் பிரமுகரை ஸ்டேஷன் பெயிலில் வழங்கிய அதிகாரி  மற்றும் அவருக்கு ஆர்டர் போட்ட அதிகாரி என இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை கரூர் போலீசார் மத்தியில் எழுந்துள்ளது.. அதிகாரிகள் கவனிப்பார்களா?