முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நீதிக்கட்சி தலைவர் குடும்பத்தினர்......

By senthilvel – September 23, 2022

44

Share E-Tamil Newsமதுரையில் கடந்த வாரம் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 1922-ம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பிட்டி தியாகராயர் பற்றியும் நினைவு கூர்ந்தார்.நீதிக்கட்சியின் தலைவராக இருந்த தியாகராயர், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு 1922-ம் ஆண்டு மதிய உணவை வழங்கினார். சுதந்திரத்துக்கு பிறகு காமராசர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கி வைத்து முன் மாதிரி தலைவராக பிட்டி தியாகராயர் திகழ்ந்தார். அவரை நினைவு கூர்ந்து மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, சர் பிட்டி தியாகராயரின் மகள் வழி பேத்தியான அமரா மற்றும் அவரது கணவர் வசந்தகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து இதற்காக நன்றி தெரிவித்தனர். மேலும், பிட்டி தியாகராயர் பற்றி நூல் ஒன்றையும் பரிசாக அளித்தனர்.