மனைவிக்கு அரிவாள் வெட்டு..... கணவர் கைது.....

By senthilvel – September 23, 2022

80

Share E-Tamil Newsதஞ்சை அருகே வல்லம் புதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பநாதன் (45). இவரது மனைவி ஜெயலலிதா (37). தன் மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி புஷ்பநாதன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில்  கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் எழுந்த தகராறில் ஆத்திரமடைந்த புஷ்பநாதன் தனது மனைவி ஜெயலலிதாவை அரிவாளால் காலில் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெயலலிதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரியில் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பநாதனை கைது செய்து விசாரணை மேற்கெண்டுள்ளனர்.