அமைதிக்கு பாதிப்பு என்றால் கடுமையான நடவடிக்கை..... - கோவை கமிஷனர் பேட்டி

By senthilvel – September 23, 2022

88

Share E-Tamil Newsகோவையில் சமீபமாக அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் காந்திபுரத்தில் ரேபிட் ஆக்ஸன் ஃபோர்ஸ் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் காந்திபுரத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இந்த ஊர்வலத்தை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிராஸ் கட் ரோடு வழியாக ராம்நகர் சென்று மீண்டும் காந்திபுரம் சென்றடைகின்றனர்.இதற்கு முன்னர் ஊர்வலத்திற்கு வந்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் பேசும்போது...... கூடிய விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.செக்போஸ்ட் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைக்க திட்டம் உள்ளது. யாரேனும் அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும்.ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.சந்தேகத்துக்குரிய நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.