ஏஜெண்ட் வீட்டை பொக்ளைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளிய அராஜகம்

By senthilvel – September 23, 2022

94

Share E-Tamil Newsமயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை பகுதியில் வசித்துவந்த மோகன் என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும் ஏஜன்ட்டிற்கு துணை ஏஜன்ட்டாக இருந்தவகையில் பணம் வாங்கி கொடுத்த வகையில் ரூ.5 லட்சம் தொகையை மன்னார்குடியை சேர்ந்த ஜெயக்குமார் தொடர்ந்து கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.   2019ம் ஆண்டுமோகனது வீட்டை ஜெயக்குமார் எழுதிவாங்கிவிட்டதாகவும் பணத்தை குடு இல்லையாட வீட்டை காலிசு என்று தகவல் ஈடுபட்டல இந்த சமயத்தில் மோகன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். 2019லிருந்து ஜெயக்குமார் மீது மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அடிக்கடி வந்து தொந்தரவு செய்துவந்ததை அடுத்து மோகனின் தாய் சந்திரா மயிலாடுதுறை மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் நீதிமன்றத்தில் வழக்கு நிலையில் இருக்கும்போது இந்த பிரச்சினை வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டது.  குத்தாலம் போலீசார் மோகனுக்கு ஆதரவாக இருந்தநிலையில் நேற்று மதியம் ஜெயக்குமார், ரவி மற்றும் 10க்கும்மேற்பட்டோர் சந்திராவீட்டிற்குள் புகுந்து சந்திரா மற்றும் அவரது பேரன் தினேஷ் ஆகியோரை பிடித்து அடித்து வெளியே துரத்திவிட்டு வீட்டை பொக்லின் எந்திரம்மூலம் இடித்து தள்ளிவிட்டு சென்றுவிட்டனர், பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர், வீடு இடிக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிவில் பிரச்னையை கிரிமினல் பிரச்னையாக உருமாற்றி முடிவை ஏற்படுத்தும் காரியத்தில் குத்தாலம் போலீசார் இறங்கியுள்ளனர்,  நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள வீட்டினை பட்டப்பகலில் பொக்லின் எந்திரம் கொண்டு இடித்துவிட்டு சாவகாசமாக ஒரு கும்பல் சென்றுள்ளது மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.