திருச்சி மாவட்ட போலீஸ் வாகனங்கள் ஏலம்.....

By senthilvel – September 23, 2022

94

Share E-Tamil Newsதிருச்சி மாவட்ட காவல்துறையினர் பயன்படுத்திய 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இரு சக்கர வானங்கள் என மொத்தம் 5 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது. வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்த பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுக்க விரும்புவோர் 25ம் தேதி மாலை 5 மணி பார்வையிட்டு கொள்ளலாம். பின்னர் 26ம் தேதி காலை 10 மணிக்குள் தற்களது ஆதார் அட்டையுடன் இரு சக்கர வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய், நான்கு சக்கர வாகனத்திற்கு 5 ஆயிரம் ருபாய் டெபாசிட் பணம் செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட காவல்துறை எஸ்பி சுஜித்குமார் தொிவித்துள்ளார்.