சுகாதார காலி பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சு.

By senthilvel – September 23, 2022

70

Share E-Tamil Newsதூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது...... தமிழகத்தில் கடந்த காலங்களில், இந்த காலகட்டத்தில் பருவநிலை மாற்றங்களின் போது வருகிற அளவு தான் காய்ச்சல் தற்போதும் உள்ளது. நேற்று ஒட்டுமொத்த பாதிப்பு 442 ஆகும்.  இதில் 7 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மூன்று, நான்கு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தாலே போதுமானது. தற்போது காய்ச்சல் கட்டுக்குள்தான் இருக்கிறது. தமிழகத்தில் சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும். தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு இல்லை. அப்படி பொதுமக்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.