தீபாவளி.... ஆவின் இனிப்புகள் ரூ.200 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு...

By செந்தில்வேல் – September 23, 2022

46

Share E-Tamil Newsதீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் ரூ.200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 9 வகையான இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார். அப்போது இனிப்புப் பொருட்களை பேக்கிங் செய்யும் புதிய எந்திர பணிகளை இயக்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சார்பில் 9 வகையான இனிப்புகளும், கார வகைகளில் மிக்சர் உள்ளிட்ட காம்போ பேக் விற்பனைக்கு தயார் செய்யும் பணிகளையும் தொடங்கி வைத்தார். இதையும் படியுங்கள்: யூ டியூப் பார்த்து விபரீதம்- சைக்கிள் டியூபை கட்டிக்கொண்டு நீச்சல் பழக கிணற்றில் குதித்த சிறுவன் பலி சிறப்பு இனிப்புகள் விலை விவரம்: நெய் பாதுஷா 250 கிராம் ரூ.190 ஸ்பெஷல் நட்ஸ் அல்வா 250 கிராம் ரூ.190 மோதி பபாக் 250 கிராம் ரூ.180 காஜு பிஸ்தா ரோல் 250 கிராம் ரூ.320 காஜு கட்லி 250 கிராம் ரூ.260 நெல்லை அல்வா 250 கிராம் ரூ.125 கருப்பட்டி அல்வா 250 கிராம் ரூ.170 வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் 500 கிராம் ரூ.450 ஆவின் மிக்சர் 200 கிராம் ரூ.100 பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஆண்டு 6 வகை இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 9 வகையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விற்பனை ரூ.82.24 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.