பாஜகவின் முதுகில் குத்திவிட்டார் நிதிஷ் குமார்--- அமித்ஷா காட்டம்

By செந்தில்வேல் – September 23, 2022

26

Share E-Tamil News பீகார் மாநிலத்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா, அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்தார். அமித்ஷா கூறியதாவது: அரசியல் கூட்டணியை மாற்றிவிட்டதால் மட்டும் நிதிஷ்குமரால் பிரதமர் ஆகிவிட முடியுமா? அரசியலில் நுழைந்ததில் இருந்தே பலருக்கும் நிதிஷ் குமார் துரோகம் செய்துள்ளார். லாலு ஜி நீங்கள் உஷாராக இருங்கள்..நாளையே உங்களை கழற்றிவிட்டு விட்டு காங்கிரசுடன் போய்விடுவார்.

வரும் 2025 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி பீகாரில் அமையும். நிதிஷ்குமாருக்கு எந்த சித்தாந்தமும் கிடையாது. பீகாரில் புதிய அரசு அமைந்த பிறகு சட்டம் ஒழுங்கு நிலை மோசம் ஆகிவிட்டது" என்றார்.