கோவையில் காருக்கு தீவைப்பு....

By செந்தில்வேல் – September 23, 2022

46

Share E-Tamil Newsகோவை மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் தியாகு.  இவரது வீடு  குனியமுத்தூரில் உள்ளது.  வீட்டு முன் நிறுத்தியிருந்த  அவரது காருக்கு மர்ம நபர்கள் தீவைத்ததாக கூறப்படுகிறது.  உடனடியாக தீ  அணைக்கப்பட்டதால் காருக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. 

ஏற்கனவே கோவையில் 3 இடங்களிலும், பொள்ளாச்சியில் ஒரு இடத்திலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட பரபரப்பு அடங்கும் முன் காருக்கு தீவைக்கப்பட்ட சம்பவம்  அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.  இது தொடர்பாக போலீசார் விசாரிக்கிறார்கள்.