சமந்தா நடிக்கும் சகுந்தலம் ரிலீஸ் தேதி அறிவிப்பு .....

By செந்தில்வேல் – September 23, 2022

52

Share E-Tamil Newsபுராண காதல் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ‘ருத்ரமா தேவி’ படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். 

Shaakuntalam

இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். வரலாற்று புராண காதல் காவியமாக உருவாகியுள்ள இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

மணிசர்மா இசையில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி டீசர் உள்ளிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது.