பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி.... திருச்சி மாவட்ட க்ரைம்....

By செந்தில்வேல் – September 23, 2022

132

Share E-Tamil Newsகணவர் மாயம்.... திருச்சி, மணப்பாறை தொப்ப நாயக்கன் பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (25). இவரது கணவர் ரங்கசாமி (45). இவர் நேற்று மாலை தன்னுடைய வீட்டிலிருந்து புறப்பட்டு அரசாங்க திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து கேட்டறிவதற்காக விஏஓ வை சந்திக்க சென்றுள்ளார். ஆனால் இரவு  வரை அவர் வீடு திரும்பவில்லை.  இது குறித்து தமிழ்செல்வி வையம்பட்டிபோலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


முதியவர் மாயம்.... திருச்சி,  மணப்பாறை பாலுசாமி தெருவை சேர்ந்தவர் சேது மாதவன் (38). இவரது தந்தை மனோகரன் (68) . உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து செய்த மாதவன் மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


லாட்டரி விற்பனை. ... ஒருவர் கைது... திருச்சி , திருவரம்பூர் கமல் நேரு நகர் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் லாட்டரி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருவெரம்பூர் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்டரி விற்பனை செய்த ஆனந்தராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டு எண்கள் அடங்கிய பேப்பர் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் ஆனந்தராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஏற்கனவே திருவெரம்பூர் போலீஸ் ஸ்டேசனில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 


பஸ்சில் இருந்து தவறி விழுந்த கண்டக்டர் பலி.... திருச்சி, மண்ணச்சநல்லூர் ஓமாந்தூர் சிறுகுடி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ பால் (29). இவரது தந்தை முத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவர் சிறுப்பத்தூரில் இருந்து வீரனே சாலையில் பஸ்சில் வந்து கொண்டிருந்தபோது அவர் பஸ்சின் பின்பகுதியில் இருந்து முன் பகுதிக்கு செல்வதற்காக பஸ்சில் இருந்து இறங்கி முன்பக்கத்திற்கு செல்லும் போது எதிர்பாராதவிதமாக அவர் படிக்கட்டு ஏறும்போது தவறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார் . இது குறித்து புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி....திருச்சி, லால்குடி தாரனூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர கர்த்தர் (31). இவரது தந்தை பிச்சை (61). ஹரிஹர கர்த்தரின் மாமா தர்மராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் திருமங்கலம் பகுதியில் உள்ளது. அங்கு பிச்சை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்று பார்த்தபோது அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து லால்குடி போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


மாடு முட்டி கர்ப்பிணி உயிரிழப்பு.... திருச்சி மாவட்டம்,  ஸ்ரீரங்கம் பெரியாளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் .இவரது மனைவி நிர்மலா தேவி. 3 மாத கர்ப்பமாக உள்ளார். கடந்த 11ம் தேதி பெரியாளம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து தங்களுக்கு சொந்தமான மாட்டை ஓட்டி செல்லும்போது மாடு துள்ளிகுதித்து அவரது வயிற்றில் முற்றியுள்ளது. இதில்  அவரது வயிற்றில் அடிபட்டு கருக்கலைந்து இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து சிவக்குமார் இனம் கொடுத்த காவல் நிலையத்திற்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை அலுவலக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மனைவி மாயம்... கணவரை தாக்கிய 4 பேர் கைது.... திருச்சி, முசிறி ஆம்பூர் பழைய புரம் தெருவை சேர்ந்தவர் விஜயராஜ் (43). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். முசிறி எம் புதுப்பட்டி சூரியம்பட்டி வடக்கு காலனியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மனைவி வாசுகி விஜயராஜனுக்கு கீழ் சித்தாளாக  பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வாசுகி வீட்டிற்கு திரும்பவில்லை விஜயராஜ் தியாகராஜன்(38), பாலு(25), கோவிந்தராஜ்(22) மற்றும் ராஜேஷ்(19) ஆகிய நான்கு பேரிடமும் அவர் வீட்டிற்கு திரும்பாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் விஜயராஜை 4 பேரும் தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் செங்கல்லை கொண்டு தாக்கியுள்ளனர். இது குறித்து விஜயராஜ் முசிறி போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தியாகராஜன்,பாலு, கோவிந்தராஜ், ராஜேஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.


செல்போனை திருட முயன்றவர் கைது.... திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (35). இவர் எஸ் எம் ஐ ஸ்வேதா நிறுவனத்தில் கட்டுமான பணியின் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று திருவெரம்பூர் முக்குலத்தோர் பள்ளி வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவல்பட்டு புது தெருவை சேர்ந்த சூசை ராஜ்(32) என்பவர் செல்வகுமாரின் செல்போனை திருட முயற்சித்துள்ளார். அப்போது அவர் கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து சூசை ராஜ் திருவெரம்பூர் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  


டூவீலர் திருட்டு.. 4 பேர் கைது.... திருச்சி , லால்குடி புதூர் உத்தமனூர் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (24) . இவர் சமயபுரம் அஞ்சப்பர் உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் தன்னுடைய டூவீலரை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அஞ்சப்பர் உணவகம் முன்பு தன்னுடைய டூவீலரை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு வந்த 2 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது டூவிலரை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர் . இது குறித்து சேதுபதி சமயபுரம் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . மாகாளி குடி பகுதியை சேர்ந்த சந்திரா என்கிற ஜெயச்சந்திரன் (21), மன்னிச்சநல்லூர் வடக்கு ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த முகமது பைசல் (24), சிறுகனூர் கீழவங்காரம் பகுதியை சேர்ந்த முருகன் (32)  ஆகிய 4 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.