கோவையில் பாஜ அலுவலகம் மீது கெரசின் குண்டு வீச்சு...

By senthilvel – September 23, 2022

142

Share E-Tamil Newsநாடு முழுவதிலும் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்த வகையில் கோவையிலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.அதை கண்டித்து கோவையில் நேற்று வெவ்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கோவையில் இரு இடங்களில் அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நடந்தன. குனியமுத்துார் புட்டுவிக்கி சாலையில் சென்ற அரசு பஸ் மீதும், என்.எச்., ரோட்டில் சென்ற அரசு பஸ் மீதும், மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.நேற்று இரவு 8:30 மணி அளவில் மாவட்ட பா.ஜ., அலுவலகம் அமைந்துள்ள காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோடு அருகே கெரசின் நிரப்பி திரி போடப்பட்ட பாட்டில், மர்ம நபர்களால் கொளுத்தி வீசப்பட்டது. எனினும் பாட்டில் வெடித்துச் சிதறவில்லை. அதேபோல் ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள மாருதி கலெக்சன்ஸ் என்ற ஜவுளிக்கடை மீதும் கெரசின் நிரப்பி திரி போடப்பட்ட பாட்டில் வீசப்பட்டது. அங்கும் வெடிக்கவில்லை. இரு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்திருப்பதாலும், இரு பாட்டில்களிலும் கெரசின் நிரப்பி இருப்பதாலும், ஒரே கும்பல் திட்டமிட்டு இந்த வேலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இது தொடர்பாக சிசிடிவி காட்சிப்பதிவுகளின் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...