பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.....

By senthilvel – September 22, 2022

116

Share E-Tamil Newsசென்னை நீலாங்கரையில் உள்ள, தன்னுடைய வீட்டில் பாரதிராஜா ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில், இவரை முதல்வர் ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் மீண்டும் இயக்குநர் பாரதிராஜாவிற்கு உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகக் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இயக்குநர் பாரதிராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.