மூதாட்டியிடம் 9 சவரன் நகை பறிப்பு.....டூவீலரில் வந்த ஹெல்மெட் வாலிபர் கைவரிசை

By senthilvel – September 22, 2022

90

Share E-Tamil Newsதிருச்சி தென்னூர் அண்ணா நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் உஷாராணி (61). இவர் தென்னூர் அண்ணா நகர் கம்பர் தெரு பகுதியில் தன்னுடைய பேரனுடன் வாக்கிங் சென்றார். அப்போது எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் உஷாராணி கழுத்தில் அணிந்திருந்த 9 சவரன் தங்கத் தாலி செயினை பறித்து சென்றார். இதுகுறித்து அவர் தில்லை நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.