ரஷியா தோற்கும் வரை உக்ரைனுக்கு உதவுவோம்..... இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்

By senthilvel – September 22, 2022

50

Share E-Tamil Newsஉக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர்  நடத்தி வருகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நேரடியாக போரில் பங்கெடுக்காவிட்டாலும், உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. பொருளாதார ரீதியாகவும் ரஷியா மீது உலக நாடுகள் வரலாறு காணாத தடைகளை விதித்துள்ளன. இந்த நிலையில் ரஷியாவை தோற்கடிக்கும் வரை உக்ரைனுக்கு தேவையான அனைத்து ராணுவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் நோக்கில் படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், உக்ரைனின் கைகள் மேலோங்கும் வரை தாங்கள் ஓய்வெடுக்கப்போவது இல்லை என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.