இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது....

By செந்தில்வேல் – September 22, 2022

80

Share E-Tamil Newsஇந்தியன் 2 படம் பற்றிய அறிவிப்பு கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவக்க விழாவின் போது அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 2019ம் ஆண்டு, படப்பிடிப்பு துவங்கி  பிரமாண்டமாக பூஜையுடன் துவங்கியது. பிரமாண்ட செட்டுகள் அமைத்து, படப்பிடிப்பு நடந்த நிலையில்... அடுத்தடுத்து படப்பிடிப்பில் பல தடங்கல்கள் ஏற்பட்டது. குறிப்பாக கமலுக்கு மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து, கொரோனா ஊரடங்கு போன்றவையும்  படப்பிடிப்பு மேலும் தாமதமாக காரணமாக அமைந்தது. 'இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றதால், திடீர் என இயக்குனர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சாரணை வைத்து, RC15 படத்தை இயக்க துவங்கினார். எனவே லைக்கா நிறுவனம், இந்தியன் 2 படத்தை முடிக்காமல், மற்ற படத்தை இயக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், பலதரப்பு பிரச்சனைகளுக்கு பின்னர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. வழக்கு வாபஸ் பெற பட்ட நிலையில்... ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் சமாதான பேச்சுவார்த்தையில் முடிந்தது. எனவே... மீண்டும் இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்து தருவதாக ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு மீண்டும்

ஆரம்பமானது. தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளதால், இன்றைய பூஜை புகைப்படத்தில் சுபாஷ்கரன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அளிக்கும் ’இந்தியன் 2’ என்ற பெயர் பலகையுடன் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர்

ஷங்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இந்நிலையில் இன்று இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார். மேலும் படப்பிடிப்பை இயக்குநர் சங்கர் துவங்கியுள்ளார்.