உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு திட்டம் .... இந்தியாவிற்கு விருது வழங்கி கவுரவித்த ஐ.நா.சபை

By செந்தில்வேல் – September 22, 2022

36

Share E-Tamil News தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான திட்டத்திற்காக இந்தியாவிற்கு ஐ.நா விருது கிடைத்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, அனைவரது உடல் நலத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற பிரதமர் இயக்கத்திற்கு இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு முன்னெடுப்பு வலுவூட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரோக்கியமான மற்றும் உடல் உறுதி இந்தியாவை கட்டமைப்பதில், நாம் உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஐநா பொதுச்சபை கூட்டத்தில், 2022 ஐநா முகமைகளுக்கிடையேயான முனைப்பு குழு மற்றும் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு திட்டத்தின் ஆரம்ப சுகாதார நலவாழ்வு விருது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என அவர் கூறினார்.