டி 20 போட்டிகளில்.......172 சிக்சர்கள் விளாசிய  ரோஹித்.... கப்தில் சாதனையை சமன் செய்தார் ....

By செந்தில்வேல் – September 21, 2022

44

Share E-Tamil Newsஇந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் ஒரு சிக்சர் அடங்கும். இதன்மூலம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 172 சிக்சர்கள் அடித்து கப்தில் சாதனையை சமன் செய்துள்ளார். நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் நேற்று மொகாலியில் நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ்ெவென்று  பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 208 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்களை குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன் பின் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில்  6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கான அடுத்த போட்டி 23ம் தேதி  நாக்பூரில் நடக்கிறது.