இந்தியாவுக்கு எதிரான முதல் டி20: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு

By senthilvel – September 20, 2022

30

Share E-Tamil Newsஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.  இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்கியது.  முதல் டி20 போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:- இந்தியா: - ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா:- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், டிம் டேவிட், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், நாதன் எல்லிஸ், ஆடம் சம்பா, ஜோஷ் ஹேசில்வுட்