அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆபரேஷன் பொள்ளாச்சி... தமிழக அரசியலில் பரபரப்பு...

By செந்தில் வேல் – August 21, 2022

924

Share E-Tamil Newsதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி கோவை வருகை புரிந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கோவை பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கு தங்குகிறார். . 24ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின் கிணத்துக்கடவில் நடைபெறும் பிரமாண்ட அரசுவிழாவில் சுமார் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதைத் தொடர்ந்து, அன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடைபெறும் மற்றொரு விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 25-ஆம் தேதி திருப்பூரில் சிறு, குறு தொழில்நிறுவனங்களின் தொழிலுக்கு தோள்கொடுப்போம் மாநாட்டில் பங்கேற்கிறார். 26-ஆம் தேதி ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிறகு கொங்கு விசிட்டை முடித்து விட்டு முதல்வர் ஸ்டாலின் அன்று மாலை சென்னை திரும்புகிறார். 

கொங்கு விசிட்டில் பொள்ளாச்சியில் நடைபெறும் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா தமிழக அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநாடு போல் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை  அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் நேரடியாக நின்று கவனித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தான் அதிமுக-பாஜ தரப்பில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நினைத்ததை முடிக்கும் செந்தில்பாலாஜியை ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் டார்கெட் அமைச்சர் என பாராட்டியிருக்கும் நிலையில் பொள்ளாச்சி நிகழ்ச்சியை சக்சஸ்சாக நடத்தி முடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. பொள்ளாச்சி சென்று விடக்கூடாது என்பதற்கான பொறுப்பை பாஜ தலைமை வானதிசீனிவாசன் மற்றும் சிபி ராராகிருஷ்ணனிடம் வழங்கியுள்ளது. குறைந்தது தினமும் 5 முறையாவது பகுதி, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் அதிமுகவில் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலைராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த ஒரு வாரகாலமாக நிர்வாகிகளை தொடர்ந்து கண்காணித்தும் பேசி வருகின்றனர்..

மதுரையில் நிதியமைச்சர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்திற்கு பிறகு பாஜகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு செந்தில்பாலாஜிக்கு மிகவும் சாதகமாக உள்ளதாக கொங்கு மண்டல நிர்வாகி ஒருவர் கூறுகிறார். இபிஎஸ்-ஓபிஎஸ் குடுமிபிடி சண்டையால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை வெகு ஈசியாக செந்தில்பாலாஜி தரப்பு சுற்றி வளைக்கிறது என்கிறார் மற்றொரு நிர்வாகி. அரசு விழா, பொள்ளாச்சி நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி காரில் ஏறியவுடன்  வாட்ஸ்அப்பில் பேச ஆரம்பிக்கிறார். அதேபோல் நிகழ்ச்சிக்கு முடித்து விட்டு நள்ளிரவு வரை நள்ளிரவு 3 மணி வரை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாட்ஸ்அப் ஆன்லைனில் இருப்பதால் கலக்கத்தில் உள்ளனர் அதிமுக-பாஜ தலைகள் என்கின்றனர் உள்ளூர் பிரமுகர்கள்.. திமுகவில் சேரும் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரமாகியிருக்கிறது என்கின்றனர் திமுகவினர்..