Skip to content

பொள்ளாச்சி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ”சிங்கவால் குரங்கு” பலி….

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு மாடு , வரையாடு என எண்ணற்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன,கவியருவி, புது தோட்டம், நவமலை பகுதிகளில் நாட்டு குரங்கணங்கள் சிங்கவால் குரங்கு, கரு மந்தி ஏராளமாகவும் குறிப்பாக புதுத்தோட்டம் வால்பாறை நுழைவாயில் பகுதிகளில் சிங்கவால் குரங்கு அதிகளவில் உள்ளது, ஆனைமலை புலிகள் காப்பகம் துணைக்கள இயக்குனர் பார்க்க தேஜா உத்தரவின் பேரில் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சிங்கவால் குரங்குகள் நடமாட்டத்தை கண்காணித்தும் வனப்பகுதியை விட்டு வெளியே சாலைகளில் வராமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் மேலும் பெங்களூர் பகுதி சேர்ந்த தொழிலதிபர் தனது சொந்த செலவில் சிங்கவால் குரங்குகள் சாலைகளில் நடக்காத வண்ணம் மரங்களில் இடையே ரப்பர் பாதை அமைக்கப்பட்டு இரண்டு தன்னார்வலர்கள் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று சிங்கவால் குரங்குகள் உயிர் இழப்பு ஏற்படாத வண்ணம் தினசரி

செல்கின்றனர் இதை அடுத்து வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் தற்போது வருகை புரிந்து வருகின்றனர் வால்பாறை வந்து சென்ற வாகனம் புது தோட்டம் பகுதியில் சாலையில் இருந்த சிங்கவால் குரங்கு மீது மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தது இதை அறியாத அதன் தாய் தன் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு சாலைகளில் உலா வந்தது கண்ட மக்கள் கண்கலங்க செய்தது தற்போது அதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் அதிக வேகத்துடன் வராமல் இருக்க வேண்டும் தற்போது வனவிலங்குகள் சாலைகளில் இடமாற்றம் அதிகம் உள்ளது தற்போது சிங்கவால் குரங்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்துள்ளது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர் .

error: Content is protected !!