Skip to content

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

  • by Authour

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர்  காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

அப்போது பவன் கல்யாண், ஆந்திராவின் அல்லுரி சீதாராமன் ராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  உடனடியாக அவர்  நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு,  விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து   சிங்கப்பூர் சென்றாா்.

இதுகுறித்து ஜனாசேனா  கட்சி அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் அவரின் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்துள்ளார். அவரின் கை மற்றும் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அதிகமான புகையை சுவாசித்ததால், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!