Skip to content

திருச்சி: சீமான் வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார்  தொடர்ந்த அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்   நேற்று திருச்சி  ஜேஎம் 4 கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர்  ஆஜராகவில்லை. இன்று(செவ்வாய்) சீமான் ஆஜராகாவிட்டால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி  கூறியதையடுத்து இன்று காலை சீமான்  கோர்ட்டில் ஆஜரானார்.

டிஐஜி வருண் குமாரும் தரப்பு  ஏற்கனவே  விளக்கம் கொடுத்த நிலையில் வருண் குமார் தரப்பில் தாக்கல் செய்த ஆதாரங்களை தங்களுக்கு தர வேண்டும் என்று சீமான் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆறு ஆதாரங்களை அரை மணி நேரத்திற்குள் சீமானிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவரிடம் கொடுக்கப்பட்டது.  ஆதாரங்களை பெற்றுக் கொண்ட பிறகு கையெழுத்திட்டு விட்டு செல்லலாம் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணைடிய  வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

வழக்கு குறித்து, டி ஐ ஜி வருண்குமாரின் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்று டிஐஜி வருண்குமார் மற்றும் சீமான் ஆகியோர் ஆஜராகினர் வழக்கின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தையும் சீமான் தரப்பு வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்க கூறியதன் பேரில் இன்று அதனை ஒப்படைத்தோம். வருகின்ற 29ம் தேதி வாய்தா போடப்பட்டுள்ளது. வழக்கில் விவரங்கள் முக்கிய ஆவணங்கள் ,பென்டிரைவ் ,உள்ளிட்டவைகளை நாங்கள் அளித்துள்ளோம்.அவர்கள் அதை பார்த்துவிட்டு அதற்கு பதில் அளிப்பதற்காக இந்த நடைமுறை செய்யப்பட்டுள்ளது.

29ம் தேதி கட்டாயம் சீமான் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறவில்லை என்றாலும் வாய்தா என்றாலே அப்பொழுது இரு தரப்பினரும் ஆஜராக வேண்டும் . கடந்த வருடம் சீமான்  டிஐஜி வருண்குமார் மற்றும்   அவரது குடும்பத்தினரை பற்றியும் பேசிய விஷயங்கள் வீடியோவாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பத்திரிகை செய்தி வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் வந்ததை அடுத்து இது தொடர்பாக சீமான் பொது வெளியில் மன்னிப்பு  கேட்க வேண்டும் என கேட்டு இருந்தோம் .அதனை சீமான் செய்யவில்லை என்பதால் இந்த வழக்கு தொடரப்பட்டு நடைபெற்ற வருகிறது.

வருண் குமார் அரசு உயர் அதிகாரி அவருக்கு பல்வேறு வேலை பணியிருக்கும் அவர் தன் கடமையை சரியாக செய்து வருகிறார் .அதன் விளைவாக தான் அவர் இப்பொழுது நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார் ,அவர் தனது பணியில் விடுப்பு எடுத்து  வழக்கு  தொடர்பாக அலைந்து கொண்டிருக்கிறார். அனைத்து வாய்தாவுக்கும்  டிஐஜி தவறாமல் வந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!