நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கைநல்லூரைச் சேர்ந்தவர்கள் சரவணன், சரனேஸ்வரி தம்பதியினர்.
இவர்களின் மகள் அகுதரணி. இவர் கருவேலங்கடயில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். இவர் தமிழரின் பாராம்பரிய கலையான சிலம்ப விளையாட்டில் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். இவர் மாவட்ட அளவிலான நடைப்பெற்ற பல்வேறு சிலம்ப போட்டிகளில் பங்கு பெற்று இரண்டு தங்க பதக்கம் , இரண்டு வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம்
சென்னையில் நடைப்பெற்ற முதலைமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் 38 மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம் விளையாட்டு போட்டியில் அகுதரணி வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.மாநில அளவில் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா வேளாங்கண்ணியில் KMS ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் நடைப்பெற்றது. இதில் சிலம்ப மாணவர்களின் சுருள் கத்தி, தீப்பந்தம், தொடுபுள்ளி, பிச்சுவாப் பிடிவரிசை, கோடாலிக் கேடயம், வேல்கம்பு, சுருள், போன்ற வீர சாகசங்கள் செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இதில் கொண்ட வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் வெள்ளி பதக்கம் பெற்ற மாணவிக்கு சால்வை அணிவித்து கௌரிவித்தார். மேலும் இதில் கலந்துக் கொண்ட பல்வேறு தரப்பினர் மாணவி அகுதரணிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.