தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் இம்மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சிலம்பபோட்டியில் அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் செ.கார்த்திகேயன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று உள்ளார்.வெற்றி பெற்ற மாணவரையும் உடற்கல்வி இயக்குனர் சித்திரைச்செல்வன் உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், நிர்மலா மற்றும் பயிற்சியாளரையும் தலைமை ஆசிரியர் சேகர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பாராட்டினார்.