யூத் கேம்ஸ் பெடரேஷன் ஆஃப் இந்திய சிலம்பம் மற்றும் அந்தமான் தமிழர் சங்கம் சார்பாக சர்வதேச அளவிலான சிலம்ப போட்டிகள் கடந்த 2 ,3 ,4 ஆகிய தேதிகளில் அந்தமானில் நடைபெற்றது. இந்தியா, அந்தமான் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இந்தியா சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ரௌத்தி்ரம் அகாடமியை சேர்ந்த மாணவ,மாணவிகள் சுமார் 13 பேர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில், 13 ,15 ,17 ,19,,21 ஆகிய வயது பிரிவுகளில் மொத்தம் 10 தங்கம் மற்றும் 6 வெள்ளி உட்பட 16 பதக்கங்களை வென்று மாணவர்கள் அசத்தினர். அதே போல ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் கோவை வீரர்கள் வென்று அசத்தியுள்ளனர். பதக்கம் வென்று திரும்பிய வீர, வீராங்கனைகளுக்கு கோவை இரயில் நிலையத்திலயே மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பயிற்சியாளர்கள் வினோத்,வெங்கடேஷ் மற்றும் வீராங்கனையான பாண்டீஸ்வரி உட்பட பெற்றோர்கள் பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்தமானில் சிலம்பம் போட்டி… தமிழக மாணவர்கள் அசத்தல்…
- by Authour
