இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் உள்ள தீஸ்தா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாம்கள் பாதிக்கப்பட்டுள்ளன, சில வாகனங்கள் சேற்றில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.