Skip to content

சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதி விபத்து… ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் பலி…

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்றுக்கொண்டிந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருக்கியது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார், ராட்சத கிரேன் உதவியுடனும்,  போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து காரில் சிக்கிய ஆறு பேரை மீட்டனர். இதில் சரவணன், அய்யனார், மற்றும் ஒரு குழந்தை என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரையை சேர்ந்த ஆறு பேர் சென்னை துரைப்பாக்கத்தில் உறவினர்கள் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் மதுரை செல்லும் போது விபத்து நடந்துள்ளது. செங்கல்பட்டு அருகே சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
error: Content is protected !!