இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் இன்று தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதில் பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
டாஸ்வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே. எல். ராகுல், ஜெய்ஸ்வால் ஆகியோர் இறங்கினர். இவர்கள் ஆரம்பத்திலேயே பந்துகளை எதிர்கொள்ள திணறினர். ராகுல்(4), ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து வந்த கில் 20, கோலி 17, ரிஷப் பண்ட் 40, ஜடேஜா 26, வாஷிங்டன் 14 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் இந்தியா 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டம் இழந்தது.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 2 ரன்னில் அவுட் ஆனார். பும்ரா பந்தில், ராகுலிடம் கேட்ச் கொடுத்து கவாஜா வெளியேறினார். 3 ஓவர் வீசிய நிலையில் முதல்நாள் ஆட்ட நேரம் முடிந்தது. ஆஸ்திரேலியா 3 ஓவர்களில் 9 ரன்கள் எடுத்து 1 விக்கெட் இழந்திருந்தது.
ஏற்கனவே நடந்த 4 டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா 2, இந்தியா 1 வெற்றி , டிரா 1 என்ற நிலையில் ஆஸதிரேலியா முன்னணியில் உள்ளது.