Skip to content

தஞ்சை அருகே சித்த மருத்துவ முகாம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர், பட்டுக்குடி, நாயக்கர் பேட்டை சமுதாயக்கூடத்தில் ஆயுர்வேதா, சித்தா மருத்துவ முகாம் நடந்தது. கும்பகோணம் சஞ்சுலா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் கமலக்கண்ணன், கிருஷ்ணன் ஆகியோர் 100 க்கும் மேற்ப் பட்டவர்களுக்கு முழு உடற் பரிசோதனை மேற்க் கொண்டு சிகிச்சையளித்தனர். இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் துணைத் தலைவர் இந்திரா காந்தி, முன்னாள் வார்டு உறுப்பினர் துரை, ஊராட்சி செயலர் முருகையன் உட்பட பங்கேற்றனர்.

error: Content is protected !!