ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக உதவி எஸ்ஐ மகேந்திர பக்ரி மற்றும் போலீசாருக்கு கிடைத்தது. எஸ்ஐ மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது எஸ்ஐ மகேந்திர பக்ரி மீது, மணல் கடத்தியவர்கள் டிராக்டரை ஏற்றினர். இதில் மகேந்திர பக்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் அளித்த தகவல்படி, உயிரிழந்த போலீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், டிரைவர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான டிராக்டரின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.