திருச்சி மாவட்ட ம் துவரங்குறிச்சியில் காவல் நிலையம் செய்பட்டு வருகிறது. இங்கு எஸ்ஐயாக பணி புரிபவர் லதா(53). இவர் காவல் நிலையததின் முதல் தளத்தில் உள்ள போலீசாருக்கான ஓய்வறைையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாராம். சில நாட்களாக போலீசாருக்கான ஓய்வறையில் உள்ள பெண்கள் கழிவறைக்கும் பூட்டு போட்டு தன் வசம் வைத்து கொண்டார் .
பெண் போலீசார் அவசர நேரங்களில் எஸ்ஐ லதாவிடம் சென்று கழிவறைக்கான சாவியை கேட்டால் தர மறுத்து , இங்க தான் போணுமா, வெளியே போயிட்டு வா என்று கூறுவாராம். இதனால் பாதிக்கபட்ட பெண் போலீசார் திருச்சி எஸ்பி வருண்குமாரின் பிரத்யேக செல்போன் எண்ணுக்கு கழிவறை பூட்டை வீடியோவாக பதிவு செய்து அனுப்பிவிட்டனர்
இதை கண்ட எஸ்பி வருண்குார் ஓபன் மைக்கில் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அதில் கழிவறையை கதவை பூட்டி தனி நபருக்கான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்.ஐ. லதாவை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றபபடுகிறார். தேவைப்பட்டால் அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுங்கள் என்றும் உத்தரவிட்டாராம். கழிவறைக்கு பூட்டு போட்ட எஸ்.ஐ. லதா இப்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இதனால் துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் நிம்மதியடைந்துள்ளனர்.