நடிகர் விஜய்க்கு, ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பில் படிப்பை மேற்கொண்டு வருகிறார், 2022 ல் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், சஞ்சய் திரைப்படத் துறையில் நுழைய விரும்புவதாகவும், ஏற்கனவே தென்னிந்தியத் திரைப்படத் துறையின் சிறந்த டைரக்டர்களிடமிருந்து பல பயிற்சிகளை பெற்று வருவதாகவும் விஜய் தெரிவித்து இருந்தார்.
தற்போது, ஜேசன் சஞ்சய் குறும்பட இயக்குநராக மாறியுள்ளார், ஜேசன் சஞ்சய் ஒரு குறும்படத்தை எடுக்கும் வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது ஜேசன் விஜய் பல்கலைக்கழகத்தில் தனது வகுப்பு தோழர்கள் மற்றும் குழுவினருடன் சேர்ந்து ஒரு குறும்படத்தை வெளியிட்டு உள்ளார். நெட்டிசன்கள் ஜேசன் விஜய் தனது தாத்தா எஸ்ஏ சந்திரசேகரைப் போலவே ஒரு புகழ்பெற்ற டைரக்டராக வருவார் என்று நம்புகிறார்கள்.
இருப்பினும், சஞ்சய் தனது தந்தை விஜய்யைப் போல முன்னணி நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்று இன்னும் சிலர் விரும்புகிறார்கள்.
‘உபென்னா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதியுடன் ஜேசன் சஞ்சய் நடிகராக அறிமுகமாகிறார் என்று பல மாதங்களுக்கு முன்பு செய்திகள் வந்தன, ஆனால் அது நிறைவேறவில்லை. மேலும் விஜய் சேதுபதியை சஞ்சய் மிகவும் விரும்புவதாகவும், அவரை ஒரு திரைப்படத்தில் இயக்கதிட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.