திருச்சி மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இரண்டாம் ஆண்டாக (10 மீ . ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவு) திருச்சி ரைபிள் கிளப்பில் கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி வயல்லெஸ் ரோட்டில் அமைந்துள்ள பார்ன் ஷூட்டர்ஸ் அகாடமியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, 76 பதக்கங்களை குவித்தனர்.இவர்கள் 37 தங்கம், 27 வெள்ளி, 12 வெண்கலப்பதங்களை வென்றனர். இந்த வெற்றியின் மூலம் பார்ன் ஷூட்டர்ஸ் அகாடமி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்தது.
போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு 28ம் தேதி மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது. திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம் வழங்கி பாராட்டினார். விழாவில் திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர் செல்வன், மூத்த நிர்வாக அதிகாரி சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை வாழ்த்தினர்.