கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசரப் அலி(63). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று இரவு விழுப்புரத்தில் இருந்து துணிகளை வாங்கிக்கொண்டு கரூருக்கு வந்து கொண்டிருந்த போது அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுசாலையில் 6 ரோடு பகுதியில் வாகனம் பழுதாகி நின்றது. இதனால் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு லிஃப்ட் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதிகாலை வரை கார் ஒரே இடத்தில் நின்று இருந்ததால் அந்த வழியாக சென்ற ரோந்து போலீசார் சந்தேகம் அடைந்தனர். காரின் உள்ளே ஆறு சூட்கேஸ் பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தவர்கள் வாகன பதிவு
எண்ணை வைத்து, சம்பந்தப்பட்ட நபருக்கு அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்ததில் அவர் பள்ளப்பட்டியை சேர்ந்த அசரப் அலி என்று தெரியவந்தது. கார் பழுதாகி நின்றதால் காலையில் மெக்கானிக் சரி செய்ய வருவதாக போலீசாரிடம் கூறினார். தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த காரில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து பார்த்ததில் உள்ளே இருந்த சூட்கேஸ் களில் வெறும் துணிமணிகள் மட்டுமே இருந்தன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.