நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி இன்று அதிகாலை காலமானார்.
நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுஸைனி பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், மருத்துவ பரிசோதனையில் ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷிஹான் ஹுஸைனி இன்று அதிகாலை காலமானார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை 1.45 மணிக்கு உயிர் பிரிந்தது. அஞ்சலிக்கு பிறகு ஷிஹான் ஹுஸைனியின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.