வங்க தேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் சேக் ஹசீனா நேற்று மதியம் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் இந்தியா தப்பி வந்தார். அவருடன் அவரது தங்கயைும் வந்தார். அவர் டில்லி அருகே உள்ள ஹிண்டன்பர்க் விமானப்படை தளத்தில் வந்திறங்கினார்.
அதைத்தொடர்ந்து அவரை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் சந்தி்த்து பேசினார். பின்னர் இது தொடர்பாக பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசித்தார். இன்று காலை ஜெய்சங்கர் அனைத்து கட்சித்லைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை சேக் ஹசீனா ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவில் இருந்து வெளியேறினார். அவர் இங்கிலாந்து செல்லக்கூடும் என தெரிகிறது. ஏற்கனவே அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய அனுமதி பெற்றிருந்ததாக தெரிகிறது. எனவே அவர் இங்கிலாந்து தான் செல்வார் என நம்பப்படுகிறது. அதே நேரம் அவர் செல்லும் இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.