பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் தனது மகனைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். அவர் நடித்த நிர்வாணக் காட்சியால் தனது மகனை விட்டு விலகி இருக்க நேர்ந்ததாக உணர்ச்சிவசப்பட்டார். பிரபல ஹாலிவுட் மூத்த நடிகை ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் நடித்த ஒரு படம் பற்றி பேசினார். நடிகைக்கு அவரது கேரியரின் தொடக்கத்தில் அங்கீகாரம் கிடைக்க அந்த படம் தான் காரணம்.
1992 ல், ஷரோன் ஸ்டோன் பேசிக் இன்ஸ்டிங்க்ட் படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தார். இந்தப் படமும் அவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது. அவருக்கு ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ஆனால் இந்தப் படத்தின் மூலம் அவரது மகனை விட்டு அவர் பிரிந்து இருக்க நேரிட்டு உள்ளது. ஷரோன் ஸ்டோன் சமீபத்தில் ‘ஐ ஹார்ட் ரேடியோ’ போட்காஸ்டில் பேசும்போது இந்த விஷயத்தை வெளிப்படுத்தினார். மகனை பிரிந்ததால் மனமுடைந்ததாக கூறினார்.
2000 களில், ஷரோன் ஸ்டோன் தனது கணவர் பில் பிரோன்ஸ்டீனிடமிருந்து விவாகரத்து கோரினார். இருப்பினும், விசாரணையின் போது நீதிமன்றத்தில் நீதிபதி மகனிடம், “உங்கள் தாயார் செக்ஸ் திரைப்படத்தில் நடிப்பது தெரியுமா? என கேட்டார். இதனால் விவாகரத்து நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஷரோன் ஸ்டோன் தன்னுடன் வளர வேண்டிய மகனை இழந்ததைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டார்.
பேசிக் இன்ஸ்டிங்க்ட் படத்தில் 16 வினாடிகள் மட்டுமே இடம் பெறும் அந்த காட்சியில் அவர் தனது கால்களைக் விரித்து வெளிப்படுத்தும் அந்த நிர்வாண காட்சியால் தான் நிறைய கேலி, மற்றும் விமர்சனங்களை சந்தித்ததாக அவர் கூறினார். இந்த படத்திற்காக நான் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டேன், நான் கோல்டன் குளோப்ஸ்க்குச் சென்றபோது, அவர்கள் என் பெயரைச் சொன்னபோது, அறையில் இருந்த ஒரு கூட்டத்தினர் சிரித்தனர்” என்று ஸ்டோன் கூறினார். ‘பேசிக் இன்ஸ்டிங்க்ட்’ படத்துக்குத் தேர்வாகி 9 மாதங்கள் ஆடிஷன் செய்யப் போராடியதாகக் கூறினார். இப்படம் 300 மில்லியன் டாலர் வசூலித்து அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது.