Skip to content

உங்களுக்கு அறிவு இல்லையா? பிரபல நடிகையை அழ வைத்த பிரபுதேவா!..

நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடிகை ஒருவரை அழ வைத்துள்ளார். அவர் அழ வாய்த்த நடிகை  வேறு யாரும் இல்லை பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சாந்தி தான். சாந்தி நடிகர் பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் ஆரம்ப காலத்தில் நடித்தாராம். அந்த சமயம் படப்பிடிப்பு உடுமலையில் நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் வைத்தே பயங்கரமாக திட்டிவிட்டாராம்.

பிரபு தேவா தன்னை திட்டிய தகவலை வேதனையுடன் நடிகை சாந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சாந்தி ” சினிமாவில் மதிப்பு என்பது இல்லை என்று நான் நினைக்கிறன். மதிப்பு இருக்கிறது. ஆனால், ஒரு அளவுக்கு தான் இருக்கிறது என்று நினைக்கிறன். ஒரு முறை என்னை பிரபு தேவா திட்டிவிட்டார். நான் ரொம்பவே வேதனையில் அழுதுவிட்டேன்.

அங்கு இருந்த ஆற்றில் நான் கல்லை கொண்டு எறிந்துகொண்டு இருந்தேன். இதனை பார்த்த பிரபு தேவா வேகமாக உங்களுக்கு அறிவு இல்லையா? போமா அந்த பக்கம் என்று கூறிவிட்டார். அப்படி அவர் திட்டியவுடன் எனக்கு அழுகை வந்துவிட்டது. என்னால் தாங்கவே முடியவில்லை அழுத பிறகு பிரபு தேவா என்கிட்டே வந்து பேசினார்.

அந்த ஆற்றில் முதலை இருக்கிறது மா நீ கல்லை எறிந்தாள் வந்துரும் என்று தான் நான் அப்படி சொன்னேன். நீங்கள் அதற்கு பக்கத்திலே இருந்தீர்கள் அப்படியெல்லாம் கல்லை எரிந்தால் என்ன ஆகிறது? என்று கேட்டார். உங்களுக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்ற பயத்தில் தான் நான் உங்களை திட்டினேன் மன்னித்து விடுங்கள்” என்று பிரபு தேவா  மன்னிப்பும் கேட்டதாக சாந்தி தெரிவித்துள்ளார். சாந்தி மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!