இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் மோகன், இன்று திருச்சி கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களை பள்ளியின் தாளாளர் அடிக்கும் காட்சிகள் செய்தி ஊடகங்களில் வெளியானது. பாதிக்கப்பட்ட மாணவன் பிரியன் காந்தியை பொன்மலை காவல் உதவி ஆய்வாளர் வினோத் என்பவர் இரண்டு காவலர்களை பள்ளி மாணவர் வீட்டிக்கு அனுப்பி பெற்றோர் அனுமதியில்லாமல் கட்டாயப்படுத்தி குற்றவாளியை போல காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிரட்டியுள்ளனர் . இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் கூட இதுவரை காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை . இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் .
இவ்வாற அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.