குமரி மாவட்டத்தில் சர்ச் பாதிரியாராக பணியாற்றியவர் பெனடிக்ட் ஆன்றோ.. 29 வயதாகிறது.. விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர். இவர், இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யது.
பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன…. சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.