தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை தினத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒரு ஆட்டை காணவில்லை என்று தேடி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வடகரை முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர் மகன் சதீஷ் (வயது30) சிறுமியின் ஆடையை பிடித்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கூச்சல் போட்டார். அப்போது அங்கு வந்த சிறுமியின் உறவினர்கள் சிறுமியை மீட்டு நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்தனர். அவர் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
