Skip to content
Home » சிறுமிக்கு பாலியல் தொல்லை….வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…தஞ்சை போக்சோ கோர்ட் அதிரடி

சிறுமிக்கு பாலியல் தொல்லை….வாலிபருக்கு 5 ஆண்டு சிறை…தஞ்சை போக்சோ கோர்ட் அதிரடி

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புரசங்காடு தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). இவர் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!