திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் ராக்கம்பட்டியை சேர்ந்தவர் மு சண்முகசுந்தரம் (32). இவர் வேலை ஏதும் இன்றி ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆவது ஆண்டு அதே பகுதியில் தனியாக மாடு மேய்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியை அருகிலிருந்த வனப்பகுதிக்கு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸôர் வழக்குப் பதிந்து, சண்முக சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் வாதி, பிரதி வாதங்கள் முடிந்த நிலையில் புதன்கிழமை , இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடத்து, சண்முக சுந்தரத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 13 மாதம் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் சுமதி ஆஜரானார்.
