தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கும்பகோணம், கர்ணக்கொல்லை கீழத்தெரு வீட்டில் வசித்து வரும் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவரது தாய் இந்துமதி கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி அந்த வழக்கை விசாரித்தகாவல் ஆய்வாளர் நாகலெட்சுமி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான கும்பகோணம், கர்ணக்கொல்லை கிழத்தெருவைச் சேர்ந்த சேசாச்சலம் (வயது-63), என்பவரை கைது செய்தார். மேலும் இது குறித்து அவர் மீது கடந்த 30.05.2023-ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் சாட்சிகளை விசாரணை செய்த தஞ்சாவூர் போகோ நீதிமன்ற நீதிபதி நேற்று சேசாச்சலத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபதாரத் தொகையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு தொகையாக அரசிடமிருந்து ரூ.6,00,000 நிவாரணத் தொகையாக பெற்று தருமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்றக் காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினர்.