கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கட்டேரி கிராமத்தில் மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி என்பவர் உள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக இரவில் மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு வரும் அவர் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் செல்போன்களில் ஆபாச வீடியோக்களை காட்டியும் தனது காம இச்சைக்கு இணங்க மாணவிகளை அவர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இருப்பினும் மாணவிகள் கதவை இடித்து தள்ளிச் சென்றனர். உள்ளே இருந்த அவரை தடியால் தாக்கினர். அவர் தான் தவறு செய்யவில்லை என கூறினார். அப்போது அங்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதபடி தன்னிடம் அவர் தகாத செயலில் ஈடுபட்டார் என கூறினார். உடனே சுற்றி நின்ற மாணவிகள் தடியால் அவரை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே சம்பவம் அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரியவந்தது. உடனே அவர்களும் அங்கு விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியர் சின்மயமூர்த்திக்கு தர்மஅடி கொடுத்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.