திருச்சி மேலப்புதூரில் உள்ள டிஇஎல்சி தொடக்கப்பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள். அங்கு கிரேசி சகாய ராணி என்பவர் தலைமை ஆசிரியையாக இருக்கிறார். இந்த பள்ளியில் விடுதியும் செயல்படுகிறது. அங்கு ஏராளமான மாணவிகள் தங்கி இருந்தனர். இவரது மகன் சாம்சன்(31) அன்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக இருக்கிறார்.
இவர் அடிக்கடி இந்த பள்ளி விடுதிக்கு வந்து மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து கோட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு டாக்டர் சாம்சனையும், அவரது தாயார் தலைமை ஆசிரியை கிரேசியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருச்சி கலெக்டர் பிரவீன் குமார் அளித்த பேட்டி:
சம்பந்தப்பட்ட பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க தவறியதால், தலைமை ஆசிரியை கிரேசி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி நிலையத்திலும், தவறுகள் நடந்தால் அதுபற்றி விசாரிக்கவும், அதைத்தொடர்ந்து புகார் அளிக்கவும் இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்க வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.
இது கல்வி நிலையங்களுக்கு மட்டுமல்ல, 10 பேருக்கு மேல் பணியாற்றக்கூடிய எல்லா இடங்களிலும் இந்த இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்க வேண்டும். இது தலைமை செயலாளர் உத்தரவு. இதுவரை திருச்சி மாவட்டத்தில் 268 இன்டர்னல் கம்ப்ளைன்ட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் உடனடியாக இந்த கமிட்டியை அமைத்துக்கொள்ள வேண்டும்.100 சதவீதம் இந்த கமிட்டி உருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லா நிறுவனஙு்களையும் அழைத்து இதுபற்றி கூறி உள்ளோம். கல்லூரி முதல்வர்களையும் அழைத்து சொல்லி இருக்கிறோம். இந்த கமிட்டி அமைக்ப்படாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டியிடம் புகார் செய்யலாம். அவர்கள் அதுபற்றி விசாரித்து போலீசில் புகார் அளிப்பார்கள். அப்படி போலீசில் புகார் அளிக்க கமிட்டியினர்,ஆசிரியர்கள் மறுத்தால் அவர்கள் மீதும், அந்த நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.போக்சோ சட்டத்தில் அந்த ஷரத்து உள்ளது.
நூடுல்ஸ் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும்போது அதன் தரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வேறு மொழியில் அது அச்சிடப்பட்டு இருப்பதால் இஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நூடுல்ஸ் போன்ற காலாவதியான பொருட்கள் குடோனில் ஸ்டாக் இருப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
10பேருக்கு குறைவான நிறுவனம் அல்லது, ஒருவர் தன்னிச்சையாக பாலியல் தொடர்பான கம்ப்ளைண்ட் கொடுக்க விரும்பினால் லோக்கல் கம்ப்ளைன்ட் கமிட்டியில் கொடுக்கலாம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் லோக்கல் கம்ப்ளைன்ட் கமிட்டி செயல்படுகிறது. மாவட்டத்தில் பெண் கலெக்டராக திருச்சியில் இருந்தால் அவர் தான் அந்த கமிட்டி தலைவராக இருப்பார். ஆண் கலெக்டராக இருந்தால், அந்த மாவட்டத்தில் உயர் பதவியில் உள்ள ஒரு பெண் அதிகாரி லோக்கல் கம்ப்ளைன்ட் கமிட்டி தலைவராக இருப்பார். திருச்சியை பொறுத்தவரை டிஆர்ஓ லோக்கல் கம்ப்ளைன்ட் கமிட்டி தலைவராக இருக்கிறார். அவர் ஒரு வருடத்தில் இந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.