Skip to content

பாலியல் புகார், பள்ளிகளில் விசாரிக்காவிட்டாலும் நடவடிக்கை- அமைச்சர் மகேஸ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கத் தவறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் எழும் பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் புகார் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மீது, 238 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் 11 பேர் மீதான வழக்கில், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட  7 பேர் வரை இறந்துவிட்டனர். வரும் மார்ச் 10-ம் தேதிக்குப் பிறகு, 56 பேர் மீதான வழக்குகளில் இறுதி உத்தரவே வரவிருக்கிறது. இது இல்லாமல், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு பரிசீலனையில் இருந்து வருகிறது.

எனவே, எந்த பணிகளையும் நிறுத்தவில்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை. மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.”  இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!